எழுத்துரு ஏன் முக்கியம்? – ஒரு கலந்துரையாடல்

அருமை நண்பர் அனஸ். 2014ஆம் ஆண்டு கோவையில் நடந்த புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கிய மாநாட்டில் இவரை முதன் முதலில் சந்தித்தேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ‘உங்களிடம் பேட்டிகாண வேண்டும்’ என்று கேட்டார். முன்புபோல் வானொலிக்காகக் கேட்கிறார் என்று நினைத்தேன், இணைப்பு காணொலிக்காக வந்தது. முப்பத்தேழு மணித்துளிகள் மகிழ்ச்சியாகக் கழிந்தன. ‘ஏற்கனவே தமிழில் நிறைய எழுத்துருக்கள் இருக்கிறது தானே – இன்னும் ஏன் புதியவற்றை செய்துகொண்டிருக்கிறீர்கள்?’, ‘எழுத்துரு ஏன் முக்கியம்?’, ‘இன்னும் என்னென்ன புதுமைகளைச் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்’ போன்ற கேள்விகள் அவரிடம் இருந்தே வந்தன. இனிமையான உரையாடல்.

Leave a Reply