தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்

சென்னையில் அமைந்துள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் 14 ஆகத்து 2019ஆம் நாள் நடத்திய உரை.

சொற்பொழிவுக் குறிப்பு:

ஓர் இந்திய மொழிக்கான வரிவடிவத்தைக் கொண்டு முதன்முதலாக அச்சிடப்பட்ட நூல் 1577ம் ஆண்டில் அச்சிடப்பட்ட தமிழ் நூலே! அதற்கான எழுத்துருக்கள் கோவாவில் உருவாக்கப்பட்டன. இவ்வெழுத்துருக்கள் பெரிய அளவிலும் அவற்றில் இழுப்புகள் (stroke) ஒரே தடிமத்திலும் இருந்தன. இந்த எழுத்துருக்கள் ஒலைச்சுவடியில் எழுதப்பட்டு வந்த தமிழ் எழுத்துகளையே ஒத்து இருந்தன. இந்த வடிவங்கள் காலப்போக்கில் எவ்வாறு மாறின? எழுத்துருக்களின் தடிமம் எப்போது எவ்வாறு மாற்றப்பட்டன? இழுப்புகளின் தடிமத்தை எவை தீர்மானித்தன. இன்றைய மின்னுட்ப உலகில் எழுத்துருக்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன? தமிழ் எழுத்துருக்களின் வடிவமைப்புப் பற்றியும் தமிழ் எழுத்துரு உருவாக்கத்தில் தனது 30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவங்களையும் முத்து நெடுமாறன் நம்மிடையே பகிர்ந்துகொள்ள உள்ளார்.

2 comments

Leave a Reply