புதிய ஆண்டில் புதிய தொடக்கம்!

நீண்ட நாட்களாக வெறும் திட்டமாக மட்டுமே இருந்த இந்த எண்ணம், இன்று நிறைவேறியது!  நான் புதிதாகத் தொடங்கியுள்ள இந்த வலைப்பூவில், எழுத்துருவியல், உள்ளிடுமுறை, செயலி உருவாக்கம் தொடர்பான எண்ணங்களையும், முப்பது ஆண்டுகளுக்குமேல் இத்துறைகளில் ஈடுபட்டப் பட்டறிவையும் பகிற எண்ணம் கொண்டுள்ளேன்.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எழுதவேண்டும் என்பது விருப்பம். அதிகம் கிடைக்கும் என நம்புகிறேன். பதிவுகள் ஆங்கிலத்திலோ தமிழிலோ இருக்கும். எல்லாப் பதிவுகளையும் இருமொழியில் வழங்குவது கடினம். சிலவற்றைச் செய்யலாம்.

உங்கள் வருகைக்கு நன்றி. தொடருந்து வாருங்கள்.

Leave a Reply